Shanakiyan MP
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் புலம்பெயர் மக்களிடம் மக்களுக்கு உதவி செய்ய கோரிக்கை
![]() |
Shanakiyan MP |
ஆட்சியாளர்களின் தவறான கொள்கை அமுலாக்கலினால் இலங்கை நாட்டிலே உணவு பஞ்சம் ஏற்படும் அபாயமுள்ளது. ஆகவே இலங்கை நாட்டு மக்களுக்கு உதவி செய்ய புலம்பெயர் தமிழ் மக்கள் ஆயத்தமாக இருத்தல் வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்
சுவிஸ் நாட்டிலே இடம் பெற்ற மக்களுடனான சந்திப்பின் போது இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துள்ளளார்
அரசியல் தீர்வினை தந்தால் வட கிழக்கில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த புலம் பெயர் தமிழர்கள் உதவி செய்வார்கள் என ஐனாதிபதியுடனான சந்திப்பில் சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.
இந்த கோரிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மௌனம் சாதிக்கின்றது. இருந்த போதிலும் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசாங்கத்தினை காப்பாற்ற எங்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
எப்போதெல்லாம் ஐனாதிபதியை சந்திக்க வாய்ப்பு கிடைக்கின்றதோ அத்தகைய சந்தர்ப்பங்களிலும் காணிகளை விடுவித்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் தொடர்பான விடயங்களை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தன்னெழுச்சிப் போராட்டத்தின் மூலமாக மேற்கூறிய கோரிக்கைகளையும் உள்ளடங்கியிருந்தமை விதந்து குறிப்பிடத்தக்கது.
குருந்தூர் மலை பௌத்த பிக்குகளால் ஆக்கிரமிக்கப்படுகின்றமை தொடர்பில் எதிர்ப்புக்களை வெளியிடாமல் ஏன் சாணக்கியன் மௌனம் சாதிக்கின்றார் என பலரும் அங்கலாய்க்கின்றார்கள். குருந்தூர் மலையை சென்று பார்வையிட்டிருக்கின்றோம். நீதிமன்றில் வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் நீதிமன்றத்தின் உத்தரவினை கருத்திற் கொள்ளாது ஐனாதிபதி தனக்கு அரசியல் யாப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தினை பயன்படுத்தி இவ்வாறான கைங்கரியங்களை செய்து வருகின்றார். 2020 ஆம் ஆண்டு கோட்டபாய ராஐபக்ச ஐனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து கிழக்கு மாகாணத்திலுள் பல்வேறு பட்ட பகுதிகள் அரசாங்கத்தினால் அத்து மீறி சுவீகரிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் இடம்பெறுகின்ற காணி அபகரிப்புக்கான செயற்பாடுகளினை எதிர்த்திருக்கின்றோம் எதிர்த்து வருகின்றோம் என்றார்.
Comments
Post a Comment